அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன?

Wednesday, December 28, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன? 

அப்துல் முஹைமின் எழுதிய உமர் ரலி ஆட்சியளராக் இருந்தால் அண்ணன் மேல் ஜிஸ்யா வரி விதிக்கப் பட்டிருக்கும் என்ற கட்டுரையில் 'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' ஹஜ் செய்யாததன் காரணம் என்ன என்பது பற்றி விமர்சிக்கப் பட்டு இருந்தது.

அவருக்கு  ஹஜ் கிரியை மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் என்று ஒரு சாராரும் அல்லது மொகலாய அரசர்கள் போல் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கும் காலங்களில் தலைமைப் 
பதவியை யாரும் கைப்பற்றி விடலாம் எனும் அச்சம் காரணமாக இருக்கலாம்
என்று ஒரு சாராரும் , 'தஜ்ஜால் மக்காவிலும் மதீனாவிலும் நுழைய முடியாது எனவே இவரும் நுழைய முடியாது '  என சுன்னத் ஜமாஅத் ஆலிம்களும், 
என இது நாள் வரை பல்வேறு காரணங்கள் கூறிக் கொண்டிருந்தாலும் , தற்போது அவர் தனது கொள்கைப்படி தனியார் ஹஜ் சர்விஸ் மூலம் செல்லாமல் ஹஜ் கமிட்டி மூலம் செல்ல இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தும் செல்லாததற்கு காரணம் தனக்கு அரசால் வழங்கப் பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதால் தான்.

ஏன் எனில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவரது பாதுகாப்பு விலக்கப் பட்டு, மீண்டும் திரும்பி வந்து அதைப் பெறுவது மிகவும் சிரமம்.மேலும் அதில் எராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளது.  கடந்த முறை தமுமுகவில் இருந்த போது பெற்ற போலிஸ் பாதுகாப்பு வெளிநாடு சென்று வந்த பிறகு பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காமல் இப்போதுதான் அண்ணன் தன்னால் காட்டிக் கொடுக்கப் பட்ட சிறைவாசிகள் நிறைய பேர் வெளியே வந்து விட்டதால் சிறைவாசிகளால் தன உயிருக்கு ஆபத்து என    பல நாடகங்கள் நடத்தி படாத பாடுபட்டு பாதுகாப்பை பெற்றுள்ளார்.
எனவே அதை இழக்க   அண்ணன் தயாரில்லை.ஆகவே தான் கடந்த ஜூலை மாதம் குவைத்திற்கு அண்ணன் வருவதற்க்காக வியர்வையை சிந்தி விசா எடுத்து அனுப்பிய சகோதரர்களின் விருப்பத்தைக் கூட புறக்கணித்தார் என்பதை அண்ணனின் இணைய தள காதல் விவகாரங்களை எல்லாம்  வெளியிட்டுக் கொண்டுள்ள    இலங்கை சலபி அனுப்பியுள்ள  அந்த குவைத் விசா காபி மற்றும் அண்ணனின் பாஸ்போர்ட் நகல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  
VISA-PJ.PDFVISA-PJ.PDF
1035K   View   Download  

யார் அந்த மக்கா நகரத்திற்குள் நுழைந்து விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்று விட்டார். எனும் இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டு அற்ப மனித பாதுகாப்பை நம்பி அபயமளிக்கப் பட்ட பூமிக்கு செல்லாமல்
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை   நம்பும் மனிதரா?  அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  .

ஏன் எனில் 'எவர் சுப்ஹு தொழுது விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளார்' எனும் நபி மொழியை நம்பி சுலபமான முறையில் அல்லாவின் பாதுகாப்பைப் பெற சுப்ஹு தொழாதவர் , காசு செலவழித்து அபயமளிக்கும் பூமி செல்வாரா?    பலவருடமாய் வசதி இருந்தும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல்   இருப்பது, ஏற்கனவே தொழுகை ,நோன்பு, ஜகாத்  போன்றவற்றில் அவருக்கு உள்ள அசட்டையான, முனாபிக் தனமான போக்கே இந்த கடமையிலும் தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இதே நிலையில் மரணித்தால் அவரின் நிலை என்னவாகும் என்பதை அவரை நிர்வாகிகளும், நேசிக்கும் நபர்களும்   எடுத்து சொல்லவேண்டும்.
- இப்னு  ஹுசைன்

0 Response to "அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன?"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை