அடுத்தவன் பொண்டாட்டியும்-அண்ணனும்!

Tuesday, December 20, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒருவனுடைய மனைவியை இன்னொருவன் கடத்திச் செல்கிறான். என்னுடைய மனைவியை கடத்தியவனிடமிருந்து காப்பாற்றி ஒப்படையுங்கள் என்று கணவன் கேட்கிறான். கடத்தியவனோ இது என்னுடைய மனைவி என்கிறான். உண்மையான கணவனோ தன்னுடைய மனைவிதான் என்பதற்கு சான்றாக திருமண போட்டோ, திருமண பதிவுப் புத்தகம் என அனைத்து ஆதாரங்களையும் காட்டுகிறான். மனைவியும் தனது உண்மையான கணவனை அடையாளம் காட்டுகிறாள். ஆனால் கடத்தியவனிடமிருந்து அவளை பிரித்து விட்டால் அவன் கோபப்படுவான்; கணவனை கொலையும் செய்து விடுவான். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று அந்த பெண் இருவருக்கும் சொந்தமானவள். கணவன் இரண்டு நாள், கடத்தியவன் இரண்டுநாள் என வைத்துக் கொள்ளட்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தால் எப்படியிருக்கும்? சரியான தீர்ப்பு என்று யாரவது சொல்வார்களா? ஆனால் சொன்னார்களே!

மேலே நீங்கள் படித்தது அலகாபாத்தில் வழங்கப்பட்ட பாபர்மஸ்ஜித் குறித்த தீர்ப்பு பற்றி அபகரிக்கப்பட்ட உணர்வு வார இதழில் நாடும் நடப்பும் பகுதியில் வந்த வர்ணனைதான். நியாயமான வர்ணனைதான். ஆனால் இதை சொல்லும் தகுதி இந்த வார இதழுக்கு உண்டா? என்பதுதான் கேள்வி. ஏனென்றால் இந்த வார இதழே ஒருவர் கடத்தி வந்ததுதானே! மேலும் தமுமுகவுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டு-முஸ்லிம் மீடியா டிரஸ்டு சொத்துக்களில் வடமரைக்காயர் தெரு அலுவலகம் நீங்கலாக மற்றவைகளை கடத்திக் கொண்டு வந்தவர்கள் கடத்தலைக் குறித்து பேசுவதா? பாக்கரின் இதஜ அமைப்பின் பெயரை சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி கள்ளத்தனமாக பதிவு செய்து குழப்பம் செய்பவர்கள் கள்ளத்தனம் பற்றிப் பேசுவதா? நரமோடி மனிதநேயம் பேசுவதைக் கிண்டல் செய்த இவர்கள், கடத்தல் கள்ளத்தனம் பற்றி இவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வெட்கப்பட வேண்டாமா?

0 Response to "அடுத்தவன் பொண்டாட்டியும்-அண்ணனும்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை