ஆட்டைப் பன்றியாக்கிய அண்ணன்!

Wednesday, December 28, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

                                                  
      .
ஆட்டைப் பன்றியாக்கிய   அண்ணன் 


அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால்...


ஆய்வுகள் என்ற பெயரில் இஸ்லாத்தில் தனது நச்சு கருத்துக்களை திணித்து தூய
இஸ்லாத்தை கலங்கப்படுத்தி வரும் அந்த பொய்யர் சமீபத்தில் "பன்றி தோல்
பயன்படுத்துவது கூடும்" என்ற ஓர் ஆய்வை வெளியிட்டு மார்க்க அறிஞர்களை
அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.அதிர்ச்சியோடு நித்திரையான பல
அறிஞர்களில் ஒருவர் மட்டும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு துணிச்சலோடு
,இச்சை மற்றும் யூத சிந்தனையின் வழி முறையில் வெளியாகியிருந்த அந்த ஆய்வு
கட்டுரைக்கு இஸ்லாமிய தோரணையில் மறுப்பு வெளியிட்டு பொய்யரின் முகமூடியை
கிழித்திருந்தார்.

தனது ஆய்வு உண்மை தான் என்று உரிய முறையில் மறுப்பு அளிப்பதிலிருந்து
விலகி எதை படித்துவிட்டு அந்த அறிஞர் மறுப்பளித்தாரோ அதையே தனது
மறுப்பாகவும் பதிலாகவும் தான் அபகரித்து வைத்திருக்கும் இணையத்தளத்தில்
வெளியிட்டு கேவலப்பட்டு நிற்கிறார்.இவரது இந்த நிலையே தனது ஆய்வு தவறு
என்பதை உறுதிப்படுத்திவிட்டது.அல்ஹம்து லில்லாஹ் 

பன்றி தோலுக்கு மார்க்க ரீதியான அங்கிகாரம் வழங்க அவர் கையில் எடுத்த
நபிமொழியில் அனைத்துமே அனுமதிக்கப்பட்ட பிராணிக்கு மட்டுமே
பொருந்தக்கூடியவை மேலும் அனுமதிக்கப்பட்ட பிராணி குறித்து தான் அது
நேரடியாகவே பேசுகிறது.குறிப்பாக ஆடு குறித்து.
ஆனால் ஒரு நபிமொழி மட்டுமே சற்று வித்தியாசப்படுகிறது.அதுதான் நாம்
கவனத்தில் கொள்ளவேண்டிய நபி மொழி.
"எந்த தோலை பதப்படுத்தப்படுகிறதோ அது தூய்மையாகிவிடும்".(அஹ்மத் 1797)
 இது தான் அந்த நபிமொழி.இதில் "எந்த தோலை" என்ற சொல் இடம் பெற்று
இருக்கிறது .இதை வைத்து தான் பன்றி தோலுக்கும் இந்த நபி மொழி பொருந்தும்
என்று கூறுகிறார் அந்த அதிமேத .?ஆய்வாளர்.இவரது இந்த கண்ணோட்டத்தை
பின்வரும்  நபி மொழியில்   செலுத்துவோம்.


'கடல் நீர் தூய்மையானது அதில் செத்து மிதக்கும் உயிரினமும்  உங்களுக்கு அனுமதிக்கப் பட்டதே!
இந்த நபி மொழியில் உள்ள 'அதில் செத்து மிதக்கும் உயிரினமும் ' என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு கடலில் செத்து மிதக்கும் பன்றியும் ஹலால் என்று பத்வா கொடுக்க முடியுமா? அதை போல் தான் சர்ச்சைக்குரிய அந்த நபி மொழியும் அன்றைய சமூகத்தில் எது குறித்து நபி ஸல் அவர்களிடம் கேள்வி வைக்கப்பட்டதோ! எது நடைமுறையில் அன்று இருந்ததோ அது குறித்து தான் பேசுகிறது.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் மேற்கண்ட நபி மொழியின் நடையில் தான் அந்த சர்ச்சைக்குரிய நபிமொழி
அமைந்திருக்கிறது.

அனுமதிக்கப் பட்ட பிராணிகளை அறுத்தோ ,அல்லது நாமாக வேட்டையடியோ, அல்லது வேட்டை மிருகங்களை கொண்டோ வேட்டையாடியோ  உண்ண நமக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.ஆனால் அனுமதிக்கப் படாத பிராணிகள் எந்த நிலையிலும் நமக்கு அனுமதி இல்லை.அது போலவே ஹராமாக்கப் பட்ட பிராணிகளின் பாகமும் எந்த நிலையிலும் அனுமதி இல்லை !

நபி ஸல் அவர்கள் மது ஹராமாக்கப் பட்ட பின் அந்த பாத்திரங்களைக் கூட அனுமதிக்க வில்லை.என்பது இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது! கழுவினால் சுத்தமாகும் பாத்திரத்துக்கே இந்த நிலை என்றால் பதப் படுத்தப் பட்ட பன்றியின் தோலை எப்படி பயன் படுத்துவது ? பதப்படுத்தப்பட்டால் ஹலால் ஆகிவிடும் என்றால் பதப்படுத்தப் பட்ட இறைச்சியும் ஹலால் என்று கூற முடியமா?

இதை எல்லாம் மனதில் கொள்ளாமல் தான் தோன்றித் தனமாக முன்னர் பன்றியின் இறைச்சி மட்டுமே ஹராம் மற்ற எலும்பு, இதயம் ,ரத்தம் போன்றவை கூடும் என பத்வா கொடுத்து [பார்க்க கிளிக் செய்யவும்]
பின்னர் பல்டி அடித்தது போல் பன்றியின் பதப் படுத்திய தோல் ஹலால் என்று பத்வா கொடுத்து, அதை நம்பி யாரேனும் பன்றிதோல் பையில் தண்ணீர் அருந்தி, பன்றித் தோலால் ஆன உடைகளை அணிந்து தொழுது அல்லது பன்றித் தோல் மூலம் வருமானம் ஈட்டி அதனால் அல்லாஹ்விடம் குற்றவாளியானால் அவர்கள் அனைவருக்கும்  அண்ணன் நாளை மறுமையில் சிபாரிசு செய்வாரா?

ஆட்டைக் கழுதையாக்கியதைக்  கேள்விப் பட்டுள்ளோம் , ஆனால் ஆட்டுத் தோலுக்கு நபி [ஸல்] சொன்ன சட்டத்தை வைத்துக் கொண்டு ,அதை பன்றித் தோலுக்கு பொருத்தும் அண்ணன் ஆட்டை பன்றியாக்குவது ஏனோ தெரியவில்லை.?   இந்தப் போக்கு தொடர்ந்தால் பசுநேசன் என்பது போல் அண்ணனை பன்றி நேசன் என மக்கள் அழைக்கத் துவங்கி விடுவார்கள்.

பொய்யரால் எடுத்து வைக்கப்பட்ட நபி மொழி அத்தனையும் நேரடியாக ஆட்டை
குறித்து பேசினாலும் "எந்த உயிரினத்தையும்"என்ற சொல் அனுமதிக்கப்பட்ட
பிற பிராணிகளான மாடு,ஒட்டகம் ,உடும்பு,போன்றவற்றிற்கும் பொருந்தும்
என்ற முடிவுக்கு தான் வரவேண்டுமே ஒழியே!உண்ணுவதற்கும் விர்ப்பதர்க்கும்
தடை செய்யப்பட்ட பன்றிக்கு பொருத்துவது அறிவுடமையாகாது! மார்க்கமும் ஆகாது.ஆகும் என்று அண்ணன் அடம் பிடித்தால் பன்றித் தோலுக்கும் பொருந்தும் என்று நிரூபிக்க வேண்டும்.  அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

முபாரக்

0 Response to "ஆட்டைப் பன்றியாக்கிய அண்ணன்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை