யார் இந்த திண்டுகள் உமர்? கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்!

Saturday, December 24, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........
யார்  இந்த திண்டுகல் உமர்?
கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்!

பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரிம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்த பேச வைத்திருக்கிறார்கள். முகத்தை மறைக்க வேண்டிய அவசியமென்ன? நேரடியாக பகிரங்கமாக வந்து சொல்லட்டும். அதையும் நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்ரோம்  இன்ஷா அல்லாஹ்.
கொடுக்க வேண்டியதை கொடுத்து என்று யூகமாக சொல்லவில்லை!  அவர்களே அந்த வீடியோ உடன் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில் பணம்பெற்றுக் கொண்டு இவர் பிறழ் சாட்சியாகக் கூடும்! என்று கூறியுள்ளதன் மூலம் இவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் பேச வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது!

 இவர் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு ரமலான் நோன்பு பெருநாள் அன்று கோவையில் உள்ள எனது வீட்டிற்கு வருகிறார். பாக்கர் அவர்கள் அவரிடம் நோன்பு செலவிற்கு பணத்தைக் கொடுக்கக் கூறினார். எவ்வளவு என்று சரியாக ஞாபகமில்லை. ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவரை வீட்டில் உட்கார வைத்து உணவு எல்லாம் கொடுத்து உபசரித்து விட்டு நீங்கள் யார் என்று கேட்கிறேன். அப்பொழுது நான் இவரின் மனைவி உட்பட நான்கைந்து சகோதரிகள்  இஸ்லாத்தை விட்டு வெளியேறி மாற்று மத சகோதரர்களை திருமணம் செய்து காஃபிர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்தேன். அதில் இரண்டு பேரை மட்டும் சகோதரர் பாக்கர் அவர்களின் முயற்சியால் மீண்டும் இஸ்லாத்திற்கு வரவழைக்க முடிந்தது. இரண்டு சகோதரிகள் இன்றளவும் காஃபிர்களாகவே உள்ளனர்.
திருமணம் ஆகாத இரண்டு சகோதரிகள் ஆலிம் படித்து இன்று கொள்கை சகோதரர்களுடன் நல்லபடியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இச்சகோதரிகள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று உமர் அவர்கள் கூறி அறிந்து கொண்டேன். இவர்களின் மூன்று பேர் மற்றும் அவர்களின் தயார் ஆகியோர் கோவை மாவட்டம் ஆனைமலை என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள்.
இதில் உமர் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் மட்டும் அடிக்கடி பிரச்சினை நடக்கும். இதனிடையே ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நான் ஆரம்பத்தில் கூறியதுபோல் உமரை சரிக்கட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள் என்று. அதுதான் உண்மை. ஏனெனில் உமர் அவர்கள் ரோட்டில் இருக்கும் மரம், மட்டைக்கு காசு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வார்.

இவர் திண்டுக்கல் பகுதியில் வசித்தபோது ஏகப்பட்ட நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி அவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியவுடன் அவர்கள் இரவோடு இரவாக இவரை தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது. இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கிறார். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குவார். ஏற்கெனவே வங்கியில் பெற்ற கடனுக்காக பிடித்தம் செய்தது போக இரண்டாயிரமோ, மூன்றாயிரமோதான் கையில் வரும். அதைப் பிடுங்குவதற்காக வட்டிக்கு கொடுத்தவர்கள் வாயிலிலே காத்து நிற்பார்கள். 

பலமுறை இவரை கடன்காரர்கள் அடித்த சம்பவத்தை டிஎன்டிஜே திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இஸ்மாயில் பார்த்துள்ளார். அவர் பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விவரிப்பார். பாக்கர் அவர்களும் பலமுறை பொருளாதார உதவிகள் செய்து இந்த உமரை காப்பற்றியுள்ளார்.

பின்பு பிரச்சினைகளின் அடிப்படையில் உமரும் ஆனைமலை பகுதிக்கு குடி பெயர்ந்தார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் வரவே சகோதரர் பாக்கர் அவர்கள் கூறியதன் பேரில் டிஎன்டிஜே ஆனைமலை கிளை நிர்வாகிகளை உடன் வைத்து நான் சமாதானம் பேசி இருக்கச் செய்தேன்.
மீண்டும் இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கே குடி பெயர்ந்தார்கள். ஏனெனில் இவருக்கு வேலை அங்கு வாரத்திற்கு ஒரு முறைதான் இங்கு வர முடிகிறது. சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறியதன் பேரில் அங்கு சென்று இருக்க கூறினோம்.
இங்கு மிக முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். உமர் அவர்கள் கடன் வாங்கிய நபர்கள் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி தனியாக இருக்கும் நேரங்களில் தகாத வார்த்தைகள் பேசி விட்டுச் செல்வதுடன் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விட்டு செல்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.இவரின் மனைவியும் இவரின் கடனை அடைக்க வெளியில் இருந்து தெரிந்தவர்களிடம் கடன் பெற்று இவரின் கடனை அடைக்க உதவியிருக்கிறார். 

ஒருமுறை பயங்கர பிரச்சினை ஏற்பட்டு வீடு குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டவுடன் இவரின் மனைவி சாமான்களை எடுத்துக் கொண்டு ஆனைமலைக்கே வந்து விடுகிறார். அவரின் சகோதரிகளின் வீட்டில் இருந்து வந்தார். இந்த மனிதரிடம் இனி குடும்பம் நடத்த முடியாது. கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து, ""வர்றியா?'' என்று கேட்கிறான்கள் என்று அழுது கூறினார். சமாதானப்படுத்தி பார்த்தோம். பலமுறை பேசியும் பயன் இல்லை.
 
இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். இப்பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கும்போதே உமர் இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். எங்களிம் வந்து முதல் மனைவியிடமிருந்து எப்படியாவது மன விலக்கு பெற்றுக் கொடுங்கள் என்று நிர்பந்திக்கத் தொடங்கினார். இவரின் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மஹர் 24 கிராம் தங்க செயினை இவரின் இரண்டாவது மனைவியிடம் வரதட்சணையாக பெற்று செட்டில் செய்கிறார்.

இவரது மனைவி இவரது கடன்களை அடைக்க வெளியில் இருந்து பெற்ற சுமார் ரூ. 1,50,000/- (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) கடன் பத்திரம் டிஎன்டிஜே ஜமாஅத்திற்கு எழுதிக் கொடுக்கிறார். தவணையாக குறிப்பிட்ட இரண்டு தொகைகளை டிஎன்டிஜே இப்பெண்மணியிடம் இன்றுவரை ஒப்படைக்கவில்லை என்பது வேறு விஷயம். அல்லாஹ் மீது ஆணையாக இதுதான் நடந்த உண்மை. இதற்குண்டான ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் இவர்களின் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த செய்தி பாக்கரை இழிவு படுத்துவது மட்டுமின்றி ஒரு பெண்ணையும் இழிவு படுத்துவது ஆகும் ! இஸ்லாமிய நெறி முறைப்படி இறைக்கட்டளைப் படி கணவன் மனைவி மீது குற்றம் சுமத்தியுள்ளதால் அதை நிரூபிக்க லிஆன் எனும் சாப அழைப்புப் பிரமாணத்திற்கு அந்தப் பெண் தயாராக உள்ளார்! பொய்யன் கூட்டத்தினர் தயாரா என அறிவிக்க வேண்டும்!   
அன்புடன்
கோவை ஜாஃபர்












 சூரத்துன் நூர் 

 (5)எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி (6) ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்). (7) இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, "நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி (8)ஐந்தாவது முறை, "அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).(9) இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (10)
  350  

0 Response to "யார் இந்த திண்டுகள் உமர்? கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை