லப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி!

Wednesday, January 25, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj


லப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி


பிஸ்மில்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழக முஸ்லிம் சகோதரர்களே! உங்களிடம் ஒரு முறையீடு. அன்பான இறையடியார்களே, லப்பைக்குடிகாடு நகர் வாழ் முஸ்லிமாகிய நாங்கள் சமர்ப்பிக்கும் இந்த முறையீட்டை கவனித்து, அல்லாஹ்வின் பொருத்தத்துடன் எங்களுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
செய்திகளாவன:-
        
ஏகத்துவத்தை விளங்கிய எமதூர்வாசிகள் நாங்கள், 1978ம் வருடம் தொட்டு அவரவர்களுடைய உழைப்பை கொண்டு வாடகையில் இறைஇல்லம் நடத்தியும், பின்னர் சேர்த்துவைத்த பொருளாதாரத்தை வைத்தும், அரபுநாடுவாழ் சகோதரர்கள் உதவிகொண்டும் 2000-2005ல்,  ஒரு பிரமாண்டமான பள்ளிவாசளை சொந்தமாக்கி, அதற்கு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் என்று அழைத்து, அதன் அரங்காவலர்கள் பொறுப்பு கொடுத்து செயல்பட்டு வருகின்றோம். எங்களது நாளில், எங்களது மக்களுக்கு ஏகத்துவத்தை விளங்க வைக்க மார்க்க அறிஞர்கள் பலரை களத்தில் பயன்படுத்தி, எங்களுடைய சமூகத்தை அதிக எண்ணிக்கைக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த 2006 கால கட்டத்தில்,  தமிழகத்தில் அறிஞர் ஜைனுலாபுதீன் குறள் உரத்த குறளில் முழங்கப்பட்டு வந்தது, யாவரும் அறிந்ததே. அந்த அறிஞரின் சமூக சித்தாந்தம் எங்கள் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் மக்களையும் ஈர்த்தது. சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் நாங்கள், கொள்கை அடிப்படையில் ஜைனுலாபுதீன் கண்டுள்ள TNTJ அமைப்புடன் அன்யோன்யத்துடன் எங்களது நட்பை பகிர்ந்து வந்தோம். அதன் அடிப்படையில் ஈர்க்கப்பட்டு TNTJ தலைமையின் ஆதிக்கத்தை இனம் காண முடியாமல் (தெரியாமல்), 2011பிப்ரவரியில் எங்களது தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை  TNTJயிடம் வழங்கினோம்.
பராமரிக்க மட்டுமே நல்கிய பொருள்களாவது.
160x40அடி மனையில், 70x40ல் இரண்டு அடுக்குநிலை தொழுகைக்கூடம், வாடகை கட்டிடத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான அரபி கல்லூரி, ஹதீதுகளின் நூல்நிலையம், இதுவரை சேமித்த பணம் இன்னும் இதர சொத்துக்கள்.
2011 பிப்ரவரியில் பொறுப்பு கிடைத்ததோடு நப்Fசை ஸைத்தானிடம் சீதனமாகவும் பெற்றுக்கொண்டார்கள். 2011 பிப்ரவரியிலிருந்து ஆகஸ்டுவரை அவர்கள் ஆடிய ஆட்டம் என்ன, என்ன, எப்படி சொல்லுவது! எல்லா பொருள்களும் TNTJக்கே சொந்தம் என்றும் ஜும்ஆவில் பள்ளி வளர்ச்சிநிதி என்று வசூலித்துவிட்டு, அது பள்ளிக்காக கிடைத்த பணம் இல்லை என்றும் TNTJ தாயியால் உருவாக்கப்பட்ட நிதி என்றும், TNTJ தலைமை மற்றும் இதர இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளி வளர்ந்தது போதும் என்ற பதிலுடன் தலைமையின் சுரண்டல் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றினார்கள். இந்த விசயத்தை கேட்டதற்கு சென்னை தலைமையை கேளுங்கள் என்ற பதிலுடன் எங்களை சீண்டத்தொடங்கினார்கள். பயமுறுத்தினார்கள். வம்பும் செய்தார்கள். இவர்களின் அதிகபட்ச செயல் 2011 ரமலான் (ஆகஸ்டு) மாதத்தில் மிகவும் கூடுதலாக வெளிப்பட்டது. மூமீன்களின், ஜமாஅத்தார்களில் இபாதத் நேரத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு, பள்ளியின் உள்சுவர், வெளிசுவர் எங்கு நோக்கினும் TNTJ யின் உரிமை பெற்றதாக எழுதி வைத்தார்கள். தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் என்கிற கல்வெட்டுவை அகற்ற திட்டமும் ஏற்பாடு செய்துமிருந்தார்கள்.
நபிவழி ஒன்றே முஸ்லீமாக மரணிக்க வழி என்று அறிந்து, வம்பிலிருந்து விடுபடும் எண்ணத்துடன், சமாதானத்தை நாடி உள்ளூர், துபாய் அமர்வுகள் நடத்தி தாருஸ்ஸலாம் உரிமையையும் மீட்க பேசப்பட்டது. TNTJ யினர் பொறுப்பில் கொடுக்கப்பட்ட அனைத்தும் தங்களுடையது என்று எங்களிடமிருந்து வெளியேரிவிட்டார்கள். தவ்ஹீத் என்பது TNTJயினரில் கொள்கையாகவும், தவ்ஹீதுக்கு கிடைத்த பொருள் அனைத்தும் TNTJக்கே சொந்தம் என்று சொல்லும் வேளையில், தவ்ஹீதின்  மொத்த உரிமையாளர் TNTJ என்றும் பிரகடனப் படுத்தியுள்ளார்கள்.
தொடர் முயற்சியாக எட்டுபேர் குழு அண்ணன் ஜைனுலாபுதீன் அவர்களிடம் சென்னை சென்று பேசவும் செய்தோம். பேச்சு பேச்சாக இருக்க, TNTJயினர் 26-08-11ல் TVயிலும், தெரு சுவரொட்டியிலும், “TNTJக்கும், தாருஸ்ஸலாம் தவ்ஹீதுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை,  நபிவழி தொழுகைக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்து, தனி தொழுகையும் கண்டார்கள். தலைமையின் வழிகாட்டுதல்படி நடக்கின்றோம் என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே செயல்பட்டார்கள். ஊர் உறங்கிய நேரத்தில் இரவோடு இரவாக பள்ளியிலிருந்த 30 வருடத்திற்காண அணைத்து ஆவணங்களையும், திருமண பதிவு புத்தகம் உட்பட அனைத்தையும் கடத்தி விட்டார்கள் (களவு செய்துவிட்டார்கள்). இன்றோடு (31-12-2011) 128நாட்களாகியும் யாதொரு கவலையும் இல்லாது, எதையும் திருப்பி தராது மௌனமாக இருக்கிறார்கள். சச்சரவை தவிர்க்க, இடை தூதுவர்களை அனுப்பியதற்கும் பதில் இல்லாது திருப்பியும் உள்ளார்கள். அமானித (பொது) பொருள் பேணுதல், இஸ்லாமிய சட்டத்தை ஓடையில் எரிந்து விட்டு, எங்களை உதாசினப்படுத்தி விட்டார்கள்.
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் இடமிருந்து கடத்தப்பட்ட (களவு செய்துபோன) பொருள்களின்  விபரம் பட்டியலாக.  1.      ரொக்கம் பணம் 2,49,620= ஒவ்வொரு ஜும்ஆ வுக்குப் பின்னும் ஒலிபெருக்கியில்  பள்ளி வளர்ச்சி நிதி
                                                                 என்று  சொல்லி வசூல் செய்தது.
2.      ரொக்கம் பணம்   1,00,000= ஒரு தனிநபர் பள்ளியின் ஒரு பகுதியை திருத்தி அமைக்க கொடுத்த நன்கொடை.
3.      ரொக்கம் பணம்      32,000= தனி வசூல் மூலம் சேர்ந்தது. 4.      ரொக்கம் பணம்      25,000= TNTJயினரில் வசூலில் மீதம். TNTJக்கு சொந்தம்.5.      வசூல் பணம்***      48,000=  ஜும்ஆ 24 வார (Feb to Aug-11)  வசூல்
                         ஆக***  4,54,620=   ***தோராயமாக.


அரபி கல்லூரியை ஆக்கிரமித்த வகையில், சுட்ட (களவு செய்துபோன) பொருளாக.
1. Ampliphier -1
2. Speakers -5
3. Stabilizer -1
4. Invertors -2
5. Ceiling Fans -12
6. Mat rolls -6
7. Safe Big -1
8. Computers – 3
9. Arabic College Hatheeth books (a full tray of a cycle cart).
இரவோடு இரவாக பள்ளியிலிருந்த 30வருடத்திற்காண ஆவணங்கள், (இடம் பெயர்த்த) களவு செய்துபோன பொருளாக.
10. Masjid Library Books (a person carrying capacity weight).
11. Account Books.
12. Minute books.
13. Photo Album.
14. Sealed certificate (Camp certificates).
15. Electric Bills, House/land Tax Documents. 16. Old Receipts books.
17. New receipts – unused 75 books.
18. Darussalam Records (a person carrying capacity weight).
19. Rubber Stamps of – round and meter.
20. And so, misc. items. Known & unknown.அறிந்துகொள்ளுங்கள்.


இப்படி தாருஸ்ஸலாம் தவ்ஹீத் மஸ்ஜிதின்  சொத்துக்களின் பேரில், TNTJ யினருக்கு ஏன் இத்தனை நாட்டம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஏன் இந்தசொத்து பிரச்சனை.
எதை கற்கிறோம், கற்பிக்கிறோம் என்று விளக்க வேண்டும்.
இஸ்லாமையா? முதலாளித்துவத்தையா?
நிற்க, தமிழக முஸ்லிம் சகோதரர்களே!  நாங்கள் இழந்த சொத்துக்கு என்ன வழி. எமதூர் ஜமாதார்களிடம் நானே பேசி “போகட்டும் சொத்து” என்று  சமாதானப் படுத்தி விடட்டுமா? ஆனால், TNTJ ஏகத்துவ வாதிகள் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டியது மிச்சம் இருக்கிறது.
அதாவது, (1) மேடை ஏறி பேச்சு திறமையால் பொய் பேசிவிட்டு போகாமல், மக்கள் மத்தியில், அவர்கள் அபகரித்த எல்லாமே அவர்கள் உரிமை பெற்றதுதான் என்பதற்கு சான்றாக, அது அதற்குண்டான TNTJன் பேரில் கொள்முதல் படிவத்தையும், வசூலித்த பணத்திற்கு TNTJன் அடிக்கட்டை ஏட்டையும், வெளிப்படையாக காட்டி விட்டு, பொருள்களை அனுபவித்துக் கொள்ளட்டும். பள்ளி ஒலி பெருக்கியில் இறைஞ்சி கேட்டு வசூல்செய்த பணம், பள்ளி வளர்ச்சி நிதிக்காக இல்லை என்று பொய் உரைத்து விடட்டும்.முடியாது போனால், (2) அமானித பொருள்களை சுருட்டியதற்காகவும், அதற்கு பொதுமக்களையும் துணை போக நிர்பந்தப் படுத்தியதற்காகவும், மொத்தமாக குவியும் பாவத்திலிருந்து பாதுகாவல் தேடும் வண்ணம், சாகும் வரை அல்லாஹ்வை அஞ்சி அழுது  பிராத்தித்துக் கொள்ளட்டும். மறுமைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.
(3) மாறாக நடந்தவைகள் எல்லாம் அல்லாஹ்வின் அருளை நாடி மறந்துவிடுவோம், தவ்ஹீத்வாதிகள், நாமெல்லாம் எத்தனையோ மனமாற்றத்தை சந்தித்துள்ளோம். இது என்ன சின்ன பிரச்சனை. உடமைகளை திரும்ப பகிர்ந்து, திருப்தி கொள்ளுவோம். இந்த செயல்களால் சமூக எழுச்சிக்கு ஒருகாட்சியாக அமைப்போம். அல்லாஹ்வின் அருள் கொடையை கண்கூடாக அனுபவிப்போம்.
தமிழக முஸ்லிம் சகோதரர்களே! TNTJ சகோதரர்களுக்கு உபதேசியுங்கள். லப்பைக்குடிகாடு நகர் வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்குகாக துவா செய்யுங்கள். பொறுமையும், நபி வழியும் நாங்கள் விரும்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

0 Response to "லப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..