ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்டுவதற்காக நடத்தப்படுவதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் அண்ணனின் விவாதங்கள் அவரது இருப்பைக் காட்டுவதற்காகவும், வார்த்தைகளால் வளைத்து தான் வெற்றி பெற்றதாக காட்டுவதாகவும் தான் இருக்கும் என்பதை அவரது தம்பிகள் நீங்கலாக அனைவரும் அறிவர்.
அந்த அடிப்படையில் தனக்கு நேரம் போகாத போது வழக்கமாக விவாத விளையாட்டுக்கு பயன்படுத்தும் ஜமாலியை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு யார் என்றே அறிமுகமில்லாத ஜெர்ரி தாமஸ் என்பவரோடு விவாத வியையாட்டை நடத்தி முடித்துள்ளார். அந்த விவாதத்தில் பைபிள் இறைவேதம் அல்ல என்று நிரூபிக்க ஆயரம் சான்றுகள் இருந்தும் அதையெல்லாம் புறந்தள்ளி தனது வழக்கமான ஆபாச மசாலாவை அரைத்திருக்கிறார். அதன் மூலம் தனது தம்பிகளை உச்சகட்ட கிளுகிளுப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த விவாதத்தின் 'ஹைலைட்' என்று அண்ணன் வர்ணிக்கும் விஷயத்தை இப்போது பார்ப்போம்.
பரபரப்பாக்கிய விஷப்பரீட்சை:
கிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்
பைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
மேற்கண்டவாறு கர்த்தர் சொல்லியுள்ளாரே! நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.
இந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.
பைபிளில் மேற்கண்டவாறு உள்ளதே! இது சாத்த்தியமா? என்று கேட்கலாம். அவர்களின் அறியாமையை விளக்கி கூறலாம். ஆனால் அதை செயல்படுத்திக் காட்டுங்கள் என்று விஷத்தையே தருவது தவறான அனுகுமுறாகும். அண்ணனின் இந்த அணுகுமுறையால் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை பொய்யாக்கியுள்ளார். அஜ்வா பேரீத்தம்பழம் குறித்த ஹதீஸ்,பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, “யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது” என்று வரக்கூடிய செய்தி பொய்யான செய்தி. என்று கூறியுள்ளார். இந்த ஹதீஸ் பொய்யானது என்பதற்கான சான்றை அண்ணன் வைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவர்களிடம் விஷம் கொடுத்து பரீட்சித்தது சரிதான் என்று அண்ணன் சொல்வாரானால், அவரால் பைபிளில் உள்ள ஆபாசம் என பட்டியலிட்ட கீழ்கண்ட விசயங்களையும் தனது முன்னால் கிறிஸ்தவர்கள் செய்து காட்டவேண்டும் என்று சொல்லாதது ஏன்?
- அண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,
- தன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.
- ஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த(?) வேதாகமத்தின் பரிசுத்த(?)வரிகள்,
- மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,
- பெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,
- மகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்;
- சந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(?) ஆபாச ஐடியா.
- கர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,
- கர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,
- பாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை
- நல்லவேளை இதையெல்லாம் செய்து காட்ட சொல்லி' பரபரப்பான விற்பனையில்' என்று சீடி போடாமல் விட்டாரே! அதுக்காக அண்ணனுக்கு கிறிஸ்தவர்கள் நன்றி சொல்லணும்.
__._,_.___
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.