இதை சொல்லும் தகுதி பி.ஜே க்கு இருக்கிறதா....?

Monday, January 23, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

ஜன 20-26, 2012 தேதியிட்ட உணர்வு பத்திரிகையில் 10ஆம் பக்கம் `சிலை திறக்க வாங்க ... நரகப் படுகுழியை நோக்கி அழைக்கும் ம.ம.க.` என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியை நார் நாராகக் கிழித்து ஒரு செய்தி வெளியாகி உள்ளது... அதில் ம.ம.க இஸ்லாத்திற்கு விரோதமாக, இணை வைத்து  இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது அந்த பத்திரிகை.

(சன் டி.வி சண்முக சுந்தரத்துக்கு வணக்கம் சொல்வது ஏகத்துவத்தை நிலைநாட்டுவது என்று அண்ணன் சொன்னால் அதை ஆட்சேபிக்கக் கூடாது) இந்த செய்தியை எழுதியவராக -நமது சிறப்பு செய்தியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது....

ஆனால் அந்த செய்தியை எழுதியது அண்ணன் தான் என்பதை அவரது எழுத்தை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்... அண்ணனுக்கே உரிய பிரத்யேகமான விமர்சன வார்த்தைகள் இந்த செய்தியில் இடம் பெற்றிருப்பதே இதற்கு சான்று.தவிர...இது போன்று மற்றவர்களை நார் நாராக கிழிக்கும் மேட்டர்களில் நமது நிருபர் என்று போடுவது அண்ணனின் வழக்கம்-இது த.மு.மு.க. தலைவர் ஜவஹிருல்லாஹ்விற்கு நன்கு தெரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம்... அந்தச் செய்தியில் தஞ்சை வடக்கு மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ஒரு சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதை விமர்சிக்கும் நோக்கில் அண்ணன் தனது காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்துள்ளார்.

ம.ம.க.வின் இந்த செயல் மார்க்கத்திற்கு விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. அது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்பதிலும் இரு வேறு கருத்துகள் இல்லை. ம.ம.க.வினர் இதுபோன்ற இணை வைக்கும் செயலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை நான் கடுமையாகவும், சகோதர வாஞ்சையோடும் சுட்டிக்காட்டுகிறோம்..

உணர்வு வெளியிட்டிருக்கும்  இந்தக் கட்டுரை ம.ம.க.வினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாகவோ, தட்டிக்கேட்கும் வகையிலோ இல்லை. மாறாக ஒட்டு மொத்த ம.ம.க நிர்வாகிகளையும் காபிர்களாக சித்தரிப்பதோடு, இவர்களுக்கு யாரும் நன்கொடைகளை  யாரும் தர வேண்டாம்.மக்கள் வழங்கும் நன்கொடைகள் இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிகளுக்குத்தான் பயன்படுகிறது என தனது காழ்ப்புணர்ச்சியையும், த.மு.மு.க மீது தனக்கு உள்ள வஞ்சத்தையும் இதன் மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார் பி.ஜே. அண்ணன்.

இன்னும், பெட்டிச் செய்தி போட்டுஅதில் , த.மு.மு.க வின் வாகனம் டி.வி சிரியலில் நடிக்க வாடகைக்கு விட்டுள்ளனர்.என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார் அண்ணன்.ஆகா அந்த போஸ்டர் விவகாரம் அவரது இலக்கு கிடையாது... த.மு.மு.க -ம.ம.க.விற்கு யாரும் நகொடை வருவதை தடுக்க வேண்டும் என்பது தாம் அண்ணனின் ஆத்மார்த்த நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.

இவை எல்லாம் உண்மை என்றே வைத்தக் கொள்வோம்.அண்ணனுக்கு இதை சொல்லும் தகுதி, அருகதை, கொஞ்சமாவது உண்டா....?
ம.ம.க விற்கு தரு நன்கொடை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று ஓலமிடும் அண்ணன்....இரண்டு வருடமாக ஊர், உலகம் அறிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயங்கி வந்த நிலையில், இஸ்லாமிய மாண்புகளுக்கு எதிராக... திருட்டுத்தனமாக ஐ.என்.டி.ஜே.வை பதிவு பண்ணி, நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, வக்கீல் பீஸ், வழக்கு செலவு என்று பல லட்சம் செலவு செய்தாரே... அந்தப் பணம் இவரது மூன் பப்ளிகேஷன்ஸ் கடையிலிருந்து எடுத்து செலவு செய்யப்பட்ட பணமா?

அல்லது இவரது தந்தை பீர் முஹம்மது VITTUH சென்ற சொத்திலிருந்து எடுத்து செலவு செய்தாரா? நன்கொடையாக அவர் ஜமாஅத்திற்கு வந்த பணத்தை எடுத்து தானே இவர் செலவு செய்து வீண் விரயமாக்கினார். எந்த வகைக்கு பணம் அனுப்பப்படுகிறதோ அந்த வகைக்கு மட்டுமே செலவு செய்யும் தூய்மையான ஜமாஅத் இது என்று பீற்றிக்கொள்ளும் அண்ணன் அந்த நன்கொடையாளர்களிடம்... நீங்கள் அனுப்பிய பணம் ஐ.என்.டி.ஜே.வை அபகரித்து, அதை தனதாக்கிக் கொள்ள நீதிமன்றத்திற்கு செலவு செய்தேன் என்று சொல்லத் தயாரா?

இந்த லட்சணத்தில் ம.ம.க.விற்கு நன்கொடை தரவேண்டாம் என்று சொல்ல வெட்கமாக இல்லையா அண்ணனுக்கு? குறைந்த பட்ச யோக்கியமாவது இருக்கிறதா இவருக்கு... இவரை நம்பி பணம் அனுப்பும் வளைகுடா சகோதரர்களும், நன்கொடையாளர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது....

ஏனெனில் நமது பொருளாதாரம் எப்படி திரட்டப்பட்டது? அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என இரண்டையும் அல்லாஹ் கேள்வியாகக் கேட்பான் என்பதை நம்புபவர்கள் முஸ்லிம்கள். அதனால் இந்த விஷயத்தில் நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும். இது புரிய வேண்டிய சகோதரர்களுக்கு புரிந்தால் சரி.....
   -       தாலு
Unarvu.jpgUnarvu.jpg
1642K   View   Download  

0 Response to "இதை சொல்லும் தகுதி பி.ஜே க்கு இருக்கிறதா....?"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..