அண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஏன் என்றால்...இந்தச் செய்தியை விட அதிர்ச்சி தரும் செய்தியெல்லாம் நாமும், இணைய தள வாகர்களும் அறிந்ததே.....ஆயினும் இதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கே எழுதுகிறோம்....
இந்தச் சம்பவங்கள் உண்மை என்று சொல்லும் அந்தச் சகோதரர் ஒரே ஒரு கேள்வியை முன் வைக்கிறார்...இந்தச் சம்பவம் பொய் என்று திருவாளர் அண்ணன் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுக்கத் தயாரா என்கிறார்.... இனி விஷயத்திற்கு வருவோம்.....
பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்கப் பணிகளில் சேவை ஆற்றிய - கடைசியாக டி.என்.டி.ஜே விலிருந்தும் விலகிய அந்தச் சகோதரர் நம்மிடம் இப்படித்தான் பேசினார்.....
அது நடந்தது டி.என்.டி.ஜேவிலிருந்து கடலூர் மாவட்ட கிளை பிரிந்து செல்வதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்... (2008ல்). ஒரு நாள் அண்ணன் மேல்பட்டாம்பாக்கம் டி.என்.டி.ஜே. கிளையினருக்கு போன் செய்து... “நான், நாளை மேல் பட்டாம் பக்கம் வருகிறேன் என்றார். (சில ஆண்டுகள் கடந்து விட்டதால் தேதி, நாள் ஆகியவை நினைவில் இல்லை. ஆனால் சம்பவம் உண்மையிலும் உண்மை)
ஆனால் அவருக்கு எந்த நிகழ்ச்சியும் அப்போது மேல்பட்டாம்பாக்கத்தில் இல்லை.. இருந்தாலும், வருவதாகச் சொல்லுகிறாரே என்று மேல்பட்டாம்பாக்கம் டி.என்.டி.ஜே நிர்வாகிகள் சரி, வாங்கண்ணே... என்று சொல்லி விட்டனர். நாளை வருவதாக அண்ணன் சொன்னதால் அவருக்கான ஏற்பாடுகளை செய்யலாம் என அண்ணன் பேசிய அன்றைய தினம் இரவே அண்ணனைத் தொடர்பு கொண்டு நாளைக்கு எத்தனை மணிக்கண்ணே வர்றீங்க... என்று சில நிர்வாகிகள் கேட்க... அண்ணனோ....``ம்ம்ம்...நான் வந்துட்டேம் மா...ரொம்ப டையர்டா இருந்துச்சு. இங்கத்தான் கடலூர்ல லாட்ஜ்ல தங்கிட்டேன்`` என்று பதிலளித்தார்.
வழக்கமாக ஜமாத்தின் காரில் வரும் அண்ணன் யாருக்கும் சொல்லாமல் பஸ்ஸில் வந்திருக்கிறாரே என யோசித்த கிளை நிர்வாகிகள் பின்னர் அமைதியாகி விட்டனர். மறுநாள் அண்ணனை அழைத்து வர சில நிர்வாகிகள் கடலூர் புதுநகரில் உள்ள அந்த துரை லாட்ஜுக்கு சென்றனர்.
பின்னர் அண்ணே வாங்கண்ணே… வெளியே போயிட்டு வரலாம்… என்று அண்ணனை அழைத்துக் கொண்டு போய் மசாலா பால் எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு... மேல்பட்டம்பாக்கத்திற்கு அழைத்துச் செல்ல முனைந்தனர்...
அப்போது அண்ணன், ``இருங்கம்மா லாட்ஜுக்கு போய் என் பேக் (துணி பை) எடுத்துட்டுப் போயிடலாம்`` என சொல்ல... அனைவரும் துரை லாட்ஜுக்குச் சென்றார்கள். அங்கு சென்று அண்ணன் தங்கிய அறையில் பார்த்தபோது அண்ணனின் துணிப் பையை அங்கு காணோம்...
உடனே ரிசப்ஷனில் சென்று பேக்கைக் காணோம் என்று புகார் சொன்னார் அண்ணன். பிறகு...நிர்வாகிகள் அங்கேயே நின்றிருக்க....அண்ணன் மட்டும் சற்றே தள்ளிப் போய்… முன்னும் பின்னுமாக உலாத்தியபடியே சுமாராக அரைமணி நேரம்வரை யாருடனோ போனில் பேசினார். அதன் பின் திரும்பி வந்து... நிர்வாகிகளைப் பார்த்து....``வாங்கம்மா போகலாம்.. பேக் வந்துடும்`` என்று சொல்லிவிட்டு மேல்பட்டாம்பாக்கம் புறப்பட்டார்.
அங்கு சென்று (எந்த நிகழ்ச்சியும் முன் கூட்டியே இல்லாததால்) அப்பகுதி மக்கள் சுமார் இருபது, இருபத்தைந்து பேரை உட்கார வைத்து கேள்வி பதில் நிகழ்ச்சி மாதிரி நடத்தினார். அன்று இரவு மேல்பட்டாம்பாக்கத்திலேயே தங்கிய அண்ணன், மறுநாள் சென்னைக்கு புறப்படத் தயாரானார்.
அவர் சென்னைக்கு புறப்படுவதற்கு முன் என்னிடம்...``என் பேக்கை ஒருத்தவங்க கொண்டு வந்து கொடுப்பாங்க... அதைப் போய் வாங்கிட்டு வந்துருங்க..`` என்றார். நானும் அவர் சொன்ன இடத்தில் போய் நின்று கொண்டிருந்தேன்... சற்று நேரத்தில் ஆட்டோவில் அங்கே வந்த ஒரு பெண் அண்ணனின் பேக்கை என்னிடம் கொடுத்து விட்டுப் போனார். அந்தப் பெண் கடலூரிலிருந்து ஆட்டோவில் வந்திருக்கிறார். அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை…
லாட்ஜில் காணாமல் போன அந்த துணிப்பை.அந்தப் பெண்ணிடம் எப்படி போனது? யார் அந்தப் பெண் என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும் அண்ணனைப் பற்றி அப்போது தவறான எண்ணம் எனக்கு ஏற்படவில்லை.
பின்னாளில் அண்ணனைப் பற்றிய பல செய்திகளை அறிந்து, அவரது இன்னொரு பக்கத்தைப் பார்த்த பின் இந்த சம்பவத்தை நினைத்து பார்த்து வருத்தப்பட்டேன் - இப்படி அந்தச் சகோதரர் சொல்லி முடித்தபோது....இப்பவாவது அந்தப் பெண் யார்னு தெரிஞ்சுதா என நாம் கேட்க..``.யார்னு கன்பார்மா தெரியல ஆனா…`` என்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தற்போது மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த இரண்டெழுத்து பெயர் கொண்ட பெண்ணின் பெயரைச் சொல்லி இந்தப் பெண்ணாக இருக்கலாம்... என்று சொன்ன அவர் இந்தச் சம்பவம் முழுவதும் தற்போதைய கடலூர் மாவட்ட டி.என்.டி.ஜே நிர்வாகி ரசாக் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்...என்றார்.....
ரஜாக் பாயை அறிந்தவர்கள் அவரிடம்... ரசாக் பாய் அல்லாஹ் மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க இந்த சம்பவம் நடந்துச்சா இல்லையானு கேட்டுப் பாருங்களேன்...
(இந்தச் சகோதரர் பேச்சு நடையில் சொன்ன தகவலை எழுத்து நடையில் நாம் எடுத்தாண்டிருக்கிறோம் ... (இதில் முன் பின் வார்த்தைகள் மாறி இருக்கலாம் ஆனால் சம்பவமும்,சாராம்சமும் உண்மை.)
- - தாலு
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.